Home /News /tamil-nadu /

வேகமெடுக்கும் கொரோனா... தமிழகத்தில் ஒரே நாளில் 1,382 பேருக்கு தொற்று!

வேகமெடுக்கும் கொரோனா... தமிழகத்தில் ஒரே நாளில் 1,382 பேருக்கு தொற்று!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னையில் 607 பேருக்கும், செங்கல்பட்டில் 240 பேருக்கும், கோயம்புத்தூரில் 289 பேருக்கும் இன்று மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கையில் உள்ளபோது மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 24,775 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,66,872 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது கொரோனா பாதித்து 6,677 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 617 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

    இன்று மட்டும்  சென்னையில் 607 பேருக்கும், செங்கல்பட்டில் 240 பேருக்கும், கோயம்புத்தூரில் 289 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி