தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் மாநிலங்களில் அதிகளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் சூழலில், சென்னை ஐஐடியில் மட்டும் 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு, முகக்கவசம் அணியாதவர்களிடம் தலா 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்தது.
ALSO READ | விசிகவினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களை கொடுக்கலாம் – அண்ணாமலை அழைப்பு
இந்த சூழலில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
இதில், மருத்துவத்துறை, பொதுத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.