முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?.. ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?.. ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு

ஊரடங்கு

Covid Restrictions: கடந்த 2ம் தேதி தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது. இதன்படி, சமுதாய, அரசு மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதித்த தடை நீக்கப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :

வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 31 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 23 பேரும், பெண்கள் 29 பேரும் உள்பட மொத்தம் 52 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிகளை இழந்த நடிகர் விக்னேஷ்..!

மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், வெளிநாடுகளில் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இதையும் படிங்க - ஷேர் ஆட்டோதான் ஏறுங்க.. கத்தி முனையில் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை - வேலூரில் பயங்கரம்

கடந்த 2ம் தேதி தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது. இதன்படி, சமுதாய, அரசு மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை அனுமதிக்கலாம். இவற்றை தவிர்த்து இதர கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.

இந்த கட்டுப்பாடு தளர்வுகள் இம்மாதம் இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த சூழலில், முதல்வர் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Covid-19, Lockdown