ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“நோ மாஸ்க், நோ எண்ட்ரி..” சென்னை விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகள் மீண்டும் அமல்

“நோ மாஸ்க், நோ எண்ட்ரி..” சென்னை விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகள் மீண்டும் அமல்

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முககவசம் அணியாதவர்களுக்கு அதிகாரிகள் 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்புகள் அதிகம் பதிவாகி வருகின்றன. நேற்று ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 476ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

  இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் வரக்கூடியவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் முக கவசம் அணியாமல இருந்தால் விமானத்தில் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் “நோ மாஸ்க், நோ எண்ட்ரி” என்ற ஸ்டிக்கர்கள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன.மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில், மாஸ்க் அணியாமல் வருகிறவா்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தி, கொரோனா விதிகளை சுட்டி காட்டுகின்றனா். மாஸ்க் ஏன் அணியவில்லை என்று விசாரித்து, முக கவசம் அணிந்து தான் வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். மாஸ்க் முறையாக அணியாமல் கழுத்தில் தொங்க விட்டு இருப்பவர்களையும் மாஸ்க்கை சரியாக அணியும்படியும் அறிவுறுத்துகின்றனா்.

  விமான பயணிகள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு தான் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் குரங்கு அம்மை பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு ஆகியவைகளை மருத்துவத்துறையினா் பாா்த்து முகவரி, போன் நம்பா்களை குறித்து கொண்டு வெளியே அனுப்புகின்றனா். முதல் அலையின் போது பயணிகளுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதிலே அவர்கள் முகவரி, போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களை கைப்பட எழுதி கொடுக்க வேண்டும் என்று விதி முறையை அமல்படுத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பரிசோதனையின் முடிவில் பாசிட்டீவ் வந்தால், அவர்களை தேடிக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கும் போது, அதில் சுமார் 15,000 பயணிகள் கொடுத்த போன் நம்பர், முகவரிகள் போலியானவை என்று தெரிய வந்தது. அந்த 15,000 பேரை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைப் போன்ற நிலை ஏற்படாமல் இருக்க தற்போது பாஸ்போா்ட், ஆதாா் காா்டுகளை அதிகாரிகளே ஆய்வு செய்து சேகரித்து வருக்கின்றனா்.

  Must Read : உல்லாசத்துக்கு மறுத்த பெண் அடித்துக்கொலை.. கள்ளக்காதலன் வெறிச்செயல்

  இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாஸ்க் அணியாமல் சென்னை விமான நிலையத்திற்கு வருபவா்களுக்கு ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், பயணிகள் மாஸ்க் அணியாமல் விமானத்தில் பயணிக்க முடியாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர் - சுரேஷ், சென்னை விமானநிலையம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Chennai Airport, Corona Mask, Corona safety, CoronaVirus, Covid-19