கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தியாகராய நகரில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதியில் கடைகளை அடைக்க வேண்டும் என்ற உத்தரவு மாநகராட்சியில் இருந்து வந்திருப்பதால் ரங்கநாதன் தெரு உஸ்மான் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பெரு வணிக கடைகளான ஜெயச்சந்திரன், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்டவை திறந்து வைக்கப்பட்டு இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சியின் வருவாய் துறையினரும் அமலாக்கத் துறையினரும் இது குறித்து ஆய்வு செய்ய கடைக்கு வந்தார்கள்.
Also Read: பாஜக எம்.எல்.ஏவை தெருவில் தேங்கியிருக்கும் கழிவு நீரில் நடக்க வைத்த தொகுதி மக்கள்!
ஆனால் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள கடைகளை அடைக்க மாநகராட்சியின் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரங்கநாதன் தெருவின் கடைகளில் மட்டுமே அடைக்க உத்தரவு இருப்பதாகவும் கடையின் நிர்வாகிகள் கூறினர்.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தாலும் அதனை முழுமையாக செய்யாமல் அறிவிப்பில் குளறுபடிகள், அமலாக்கத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்று இருப்பதால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எந்தெந்த இடங்களில் கடைகள் மூடல்:
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை,
Also Read: கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை... சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்
புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை,
ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை,
ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், கொத்தவால்சாவடி சந்தை, ராயபுரம் சந்தை, அமைந்தகரை சந்தை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு,
ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை,
அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக நகர் சந்திப்பு வரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரெட் ஹில்ஸ் பகுதியில் ஆஞ்சநேயர் சாலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய இடங்களில் வணிக வாளங்கள் மற்றும் அங்காடிகள் இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை செயல்பட அனுமதி இல்லை.
மேலும் கொத்தவால் சாவடி மார்க்கெட் செயல்பட தடை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.