டாஸ்மாக் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் - தமிழக அரசு

கோப்பு

தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,238 பேருக்கு தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 144 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

    எவை இயங்கும்? எவை இயங்காது?

    1. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை

    2. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    3. பயணியர் இரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 % இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    4.பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் , காய்கறி கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    5. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    6. மளிகை,பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விநியோகம்போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    7. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    இந்தநிலையில், நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் 12 வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: