Corona Restrictions | இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கில் அனுமதிப்பட்டுள்ள சேவைகள் என்ன?

Corona Restrictions | இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கில் அனுமதிப்பட்டுள்ள சேவைகள் என்ன?

மாதிரி படம்

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துவருகிறது. ஏற்கெனவே, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இன்று மாலையில் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் சில சேவைகளுக்கு மட்டும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட சேவைகள்:

    • இரவு நேர ஊரடங்கின்போது அவசர மருந்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

    • மேலும் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.

    • ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

    • பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

    • தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

    • தொலைத் தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

      ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு:


    • அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.

    • முழு ஊரடங்கு நாள்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அந்த நேரங்களில் ஸ்விகி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் செயல்படலாம்.

    • 20 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளலாம்.

    Published by:Karthick S
    First published: