சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419ஆக உயர்வு!

கோப்புப்படம்

முன்னதாக 357 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தன. கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் தற்போது இவற்றின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

  • Share this:
சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 85 கட்டுப்படுத்தப் பகுதிகள் உள்ளன.

கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் எதுவும் பொருந்தாது. வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் சமீபத்திய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முன்னதாக 357 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தன. நாளுக்கு நாள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த எண்ணிக்கை 419ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக, ராயபுரத்தில் 85இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், திரு.வி.க.நகர் - 75, வளசரவாக்கம் - 45, தேனாம்பேட்டை- 40, தண்டையார்பேட்டை- 40, கோடம்பாக்கம் - 23 ஆகிய எண்ணிக்கையிலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

அதேபோல், திருவொற்றியூர் - 20, அடையாறு- 13, மாதவரம் - 13, அண்ணாநகர் -13, மணலி - 9, பெருங்குடி- 6, சோழிங்கநல்லூர் - 6, ஆலந்தூர் - 3 பகுதிகள் என மொத்தம் 419 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published: