முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அச்சத்தில் மக்கள்!

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அச்சத்தில் மக்கள்!

கொரோனா

கொரோனா

Corona increase | தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் 39 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 10 பேருக்கும், செங்கல்பட்டில் 4 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 235-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருச்சியைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கு இணை நோய்கள் ஏதும் இல்லாத நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Corona, CoronaVirus, Tamil Nadu