கொரோனா: 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டுள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா: 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டுள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
தமிழகத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் மக்கள் மத்தியில் பரவலாக சோதனை செய்யப்படும் (Rapid Test). அதற்காக 1 லட்சம் 'கிட்' வாங்கப்பட்டுள்ளன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் இதுவரையில் 4,162 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் போதுமானநிதி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது.

மக்களின் நலனுக்காகத் தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை துன்புறுத்துவதற்காக பிறப்பிக்கப்படவில்லை. சென்னையிலும் நடமாடும் காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். விசைத்தறி, முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும். பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். இந்தியாவில் கொரோனா வீரியம் படிப்படியாக அதிகரித்துவருகிறது.


நம்மிடம் தேவையான அளவுக்கு N95 முகக் கவசம் கையிருப்பு உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading