தமிழக அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

  • Share this:
    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 13 கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் 13.05.2021 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக பின்வரும் தீர்மானம் (தீர்மானம் எண்.4) நிறைவேற்றப்பட்டது.

    “நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது”

    2.  மேலே தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து  பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பின்வரும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.

    ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்

    1. திமுக - மருத்துவர் நா.எழிலன்
    2. அதிமுக -  மருத்துவர் சி.விஜய பாஸ்கர்
    3. காங்கிரஸ் -  திரு.ஏ.எம். முனிரத்தினம்
    4. பாமக - திரு. ஜி.கே. மணி
    5. பாஜக - திரு. நயினார் நாகேந்திரன்
    6. மதிமுக - மருத்துவர் தி. சதன் திருமலைக்குமார்
    7. விசிக - திரு. எஸ்.எஸ்.பாலாஜி
    8. மா.,கம்யூனிஸ்ட்  - திரு.வி.பி. நாகை மாலி
    9.  கம்யூனிஸ்ட்  - திரு. தி.ராமசந்திரன்
    10. மமக -  முனைவர் ஜவாஹிருல்லா
    11. கொமதேக - திரு.ரா.ஈஸ்வரன்
    12. தவாக - திரு.தி.வேல்முருகன்
    13. புரட்சி பாரதம் - பூவை திரு.ஜெகன் மூர்த்தி

    3.  மேற்படி ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும்.  இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: