தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

முகவர்கள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனா இரண்டாவது அலை, யாரும் எதிர்பாராதவகையில் மிகப்பெரும் பாதிப்புகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக சுகாதார கட்டமைப்பு திணறத் தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 1,58,129 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 30,621 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 14,99,485 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 19,287 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 12,98,945 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 297 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 16,768 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,991 பேருக்கும், செங்கல்பட்டில் 2,173 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,835 பேருக்கும் கன்னியாகுமரியில் 1,079 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: