தமிழகத்தில் 35,000-த்தை நெருங்கிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு - இன்று மட்டும் 365 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 365 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகளில் இல்லாத உச்சமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். இந்தியாவில் உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைந்துவருகிறது. பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதனால் மொத்த பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைந்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,70,355 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 16,99,225 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 23,863 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 14,26,915 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  இன்று மட்டும் கொரோனா பாதித்து 365 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த பாதிப்பு 18,734 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,297 பேருக்கும், செங்கல்பட்டில் 2,275 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,250 பேருக்கும், ஈரோட்டில் 1,362 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: