சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு கொரோனா தொற்று; சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு கொரோனா தொற்று;

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாவலராக திவாகரன் செயல்பட்டுள்ளார். குறிப்பாக ஜெயலலிதா எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவருடன் சசிகலா செல்வது வழக்கம். இவர்களுக்கு பாதுகாவலராக திவாகரன் செல்வார்.

  • Share this:
திருவாரூர் மாவட்டம் சுந்தரகோட்டை பகுதியில் வசித்து வரும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரும், சசிகலாவின் சகோதரருமான, திவாகரனுக்கு கடந்த ஓரிரு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று இரவு அவருக்கு தொண்டைவலி மற்றும் லேசான மூச்சு திணறல் இருந்தது.

இதனால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவின் தம்பி திவாகரன் தற்போது அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். மேலும் மன்னார்குடியில் செங்கமலத்தாயார் மகளிர் கல்வி அறக்கட்டளை மூலம் மகளிர் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாவலராக திவாகரன் செயல்பட்டுள்ளார். குறிப்பாக ஜெயலலிதா எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவருடன் சசிகலா செல்வது வழக்கம். இவர்களுக்கு பாதுகாவலராக திவாகரன் செல்வார். குறிப்பாக தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்ஜிஆர் மறைந்த பொழுது அதிமுக இரு அணியாகப் பிரிந்து அப்பொழுது ஜெயலலிதா ஒரு அணியும் ஜானகி தலைமையில் ஒரு அணியும் அதிமுகவில் செயல்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த நேரத்தில் ஜெயலலிதா முதல் முறையாக மன்னார்குடியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தவர் திவாகரன் என அதிமுகவில் நிர்வாகிகள் இன்று வரை கூறி வருவார்கள்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இருந்து சசிகலா விலக்கப்பட்டார். அதனை அடுத்து தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இதில் திவாகரனுக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா சிறையிலிருந்த பொழுது திவாகரன் எனது சகோதரன் அல்ல என கோபமாக தெரிவித்தார்.

Also read: ‘அரசு சார்பில் வீடு வேண்டும்' முதலமைச்சருக்கு டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கோரிக்கை

இதைத்தொடர்ந்து தினகரனுக்கும் திவாகரனுக்கு மோதல் ஏற்பட்டு வந்தது, தற்பொழுது சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதால் திவாகரனை நேரடியாக சந்திப்பார் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
Published by:Esakki Raja
First published: