முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒரே நாளில் 37 பேருக்கு தொற்று பாதிப்பு... இன்றைய கொரோனா நிலவரம்..!

ஒரே நாளில் 37 பேருக்கு தொற்று பாதிப்பு... இன்றைய கொரோனா நிலவரம்..!

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 9 பேருக்கும், செங்கல்பட்டில் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 38 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 9 பேருக்கும், செங்கல்பட்டில் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 245-ஆக அதிகரித்துள்ளது. அதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Corona positive, CoronaVirus, Covid-19