6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்று: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்ன?

கொரோனா

கோவை, சென்னை, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மூன்று இலக்கங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகிவரும் சூழலில், ராமநாதபுரம், பெரம்பலூர், தென்காசி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10க்கும் குறைவாகவே தொற்று பதிவாகியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,630  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் 23 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,54,5998 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதில், 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,00,885 ஆக அதிகரித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,827 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், மொத்தமாக 25,47,005 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து  குணமடைந்துள்ளனர்.

  கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,709 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 19,171 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

  இதையும் படிங்க: 500 கி.மீ. தூரத்துக்கு கடத்தப்பட்ட லாரி-1000 சிசிடிவி உதவியுடன் மீட்ட போலீசார்!


  தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று மட்டும் கோயம்புத்தூரில் 198 பேருக்கும், சென்னையில் 177 பேருக்கும், ஈரோட்டில் 146 பேருக்கும், தஞ்சாவூரில் 108பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக  ராமநாதபுரத்தில் 2 பேருக்கும்,  பெரம்பலூரில் 4 பேருக்கும்,  விருதுநகரில் 5 பேருக்கும் தென்காசியில் 6 பேருக்கும் திண்டுக்கலில் 7 பேருக்கும் தேனியில் 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: சென்னையில் வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி... முன்பதிவு செய்வது எப்படி?

  Published by:Murugesh M
  First published: