தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,604 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,734 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 18,887 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,604  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் 25 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,52,447 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதில், 1,604பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர் ஆவார்.  மொத்த பாதிப்பு 26,02, 489 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,863  பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், மொத்தமாக 25,48,868 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து  குணமடைந்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,734 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 18,887 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மெரினா பீச்சை திறந்த முதல்நாளில் மூன்று பேர் அலையில் சிக்கி மாயம்!


    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று மட்டும் கோயம்புத்தூரில் 195 பேருக்கும், சென்னையில் 172 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், தஞ்சாவூரில் 104 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக  ராமநாதபுரத்தில் 3 பேருக்கும்,  பெரம்பலூரில் 3 பேருக்கும்,  விருதுநகரில் 8 பேருக்கும் தென்காசியில் 7 பேருக்கும்  தேனியில் 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு எப்படி இருக்கும்?
    Published by:Murugesh M
    First published: