Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 13,958 பேருக்கு கொரோனா பாதிப்பு...

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 13,958 பேருக்கு கொரோனா பாதிப்பு...

Corona Positive

Corona Positive

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் இன்றைக்கு பாதிப்பு சுமார் 14 ஆயிரத்தை எட்டியுள்ளது

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 13,958 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கெரோனா பாதிப்பு 12,895 ஆக இருந்த நிலையில், இன்றைக்கு பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தின பாதிப்பு 10,978 ஆக இருந்தது.

    இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 62,767 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,547 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இன்றைய தேதி வரை தமிழ்நாட்டில் 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 8,307 பேர் ஆண்கள். 5,683 பேர் பெண்கள் ஆவர்.


    தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் மருத்துவமனைகள் தனியார் 252, அரசு 69 என மொத்தம் 321 மருத்துவமனைகள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோன பாதிப்பு காரணமாக மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் இன்னு 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்... வல்லுனர்கள் கணிப்பு

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
     தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்படி,   14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ம் தேதி (ஞாயிறு)  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




    தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். அதன்படி இம்மாதம் 31ம் தேதிவரை வார நாட்களில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.


     

     

     

     
    Published by:Musthak
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி