முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இன்ஃப்ளூயன்சா பாதித்த 2,200 பேரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

இன்ஃப்ளூயன்சா பாதித்த 2,200 பேரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

அமைச்சர் மா சுப்பிரமணியன்

அமைச்சர் மா சுப்பிரமணியன்

இன்ப்ளூயன்சா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்துவந்தநிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு பிற்பாதியிலிருந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளது. பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுவதற்கு முன்னதாக அவர் உயிரிழந்தார். அவருடைய தொடர்பில் இருந்துவர்களுக்கு உடனடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர், ’இன்புளூயன்சா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார். இன்புளூயன்சா காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவுக்கு இருப்பில் இருப்பதாகவும் கூறினார்.

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000... பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பாமக!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில், 2,200 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Corona, Ma subramanian