இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா முதல் அலையும், இரண்டாம் அலையும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்தது. தமிழ்நாடும் இரண்டாவது அலையை சமாளிக்கத் திணறியது. மூன்றாவது அலையை பெரியஅளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இருப்பினும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து இருந்துவருகிறது. தற்போது, கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 14,016 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 34,57,382 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 148 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இன்று, சென்னையில் மட்டும் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, செங்கல்பட்டில் 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரையில், 1,231 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.