• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு: 500-யை நெருங்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு: 500-யை நெருங்கும் உயிரிழப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகளில் இல்லாத உச்சமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். இந்தியாவில் உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைந்துவருகிறது.

    பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதனால் மொத்த பாதிப்பு 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,65,953 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 17,70,988 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 24,478 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 14,76,761 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

    கொரோனா பாதித்து இன்று மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 19,598 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 5,913 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,243 பேருக்கும், செங்கல்பட்டில் 2,226 பேருக்கும், ஈரோட்டில் 1,656 பேருக்கும், திருவள்ளூரில் 1,667 பேருக்கும், திருப்பூரில் 1,796 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: