• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு- 397 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு- 397 பேர் உயிரிழப்பு

மாதிரி புகைப்படம்

மாதிரி புகைப்படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 397 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகளில் இல்லாத உச்சமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். இந்தியாவில் உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைந்துவருகிறது. பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதனால் மொத்த பாதிப்பு 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,71,094 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 17,34,804 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 25,368 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரையில், 14,52,283 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 397 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 19,131-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,073 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,335 பேருக்கும், செங்கல்பட்டில் 2,092 பேருக்கும், ஈரோட்டில் 1,505 பேருக்கும், மதுரையில் 1,269 பேருக்கும், திருப்பூரில் 1,581 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: