தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: இன்று 270 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை நெருங்கியுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 270 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டபோது நாள் ஒன்றுக்கு 36,000 பேர் வரைக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். பின்னர், மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியது. தற்போது, தினசரி கொரோனா பாதிப்பு அளவு முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,71,085 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 23,88,746 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 21,058 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 22,44,073 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 270 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 30,338 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோயம்புத்தூரில் 1,420 பேருக்கும், சென்னையில் 689 பேருக்கும், ஈரோட்டில் 1,123 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: