• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Airport : அந்தமான் செல்லவிருந்த கொரோனா நோயாளி... சென்னை விமானநிலையத்தில் கண்டுபிடிப்பு

Chennai Airport : அந்தமான் செல்லவிருந்த கொரோனா நோயாளி... சென்னை விமானநிலையத்தில் கண்டுபிடிப்பு

விமானம்

விமானம்

அந்தமான் விமானத்தில் பயணிக்க வந்த கொரோனா நோயாளியை சென்னை விமானநிலையத்தில் கண்டுப்பிடித்து, அவருடைய பயணத்தை ரத்து செய்து, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

  • Share this:
    சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏா்இந்தியா விமானம் இன்று காலை 6 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை சான்றிதழை சரிபார்த்து ஏா்இந்தியா ஊழியா்கள் பயணிகளை அனுப்பிக் கொண்டிருந்தனா்.

    அப்போது அந்தமானை சோ்ந்த மார்சலாம் (40) என்ற பயணியின் மருத்துவ சான்றிதழை வாங்கி பரிசோதித்தபோது, அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாசிடிவ் என்றிருந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த விமான ஊழியா்கள் அவரை தனியே நிறுத்தி வைத்தனா். அவா், தான் தனது சொந்த ஊரில் சென்று சிகிச்சை பெற்றுகொள்வதாக கூறினார். ஆனால் ஏா்இந்தியா அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய பயணத்தை ரத்து செய்தனா். அதோடு சுகாதாரத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

    விமான நிலைய சுகாதாரத்துறையினா் விரைந்து வந்து கொரோனா பாசிடிவ் பயணிக்கு பாதுகாப்பு கவச உடைகளை அணிவித்து தனி ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கொரோனா வார்டுக்கு அழைத்து சென்றனா். அதோடு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் பயணிகள் புறப்பாடு பகுதியை கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினா்.

    இதேபோல, கடந்த 22 ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக புறப்பட்ட விமானத்தில் பயணிக்க இருந்த கொரோனா நோயாளி கண்டுப்பிடிக்கப் பட்டதால், புறப்பட்ட விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா நோயாளி பயணியை கீழே இறக்கி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.

    Must Read : மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா: கோயில் வளாகத்திலேயே ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

     

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான பயணிகளுக்கு, நேற்றில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து அந்தமான் உள்ளிட்ட ஆறு வெளிமாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: