ஊட்டிக்கு வரும் அண்டை மாநில சுற்றுலா பயணிகள்... - நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

இன்னசென்ட் திவ்யா

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

 • Share this:
  கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

  இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு சீட்டுடன் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

  இல்லை எனில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அந்த சான்றிதழ்கள் இல்லையெனில் நீலகிரிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டாது.

  Must Read : 41 அரசு கல்லூரி ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் கிடைக்குமா? - ராமதாஸ் கேள்வி

  மேலும் சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை மற்றும் சுய முகவரி சரிபார்ப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இல்லை எனில் அபராதம் விதிக்கப்பட்டு நீலகிரிக்கு வர அனுமதி மறுக்கப்படும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: