• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு வரும் 5ம் தேதி முதல் கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் என, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    Also read: மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என கூறிய அவர், சென்னை விமான நிலையத்தில் ஓரிரு நாட்களில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் 13 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

    கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் கொரோனா நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும். 14 நாட்களுக்கு முன்பு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சீரோ சர்வேயின் அடிப்படையில் ஈரோடு உள்ளிட்ட நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கூடுதலாக வழங்குவதுடன், மருத்துவ கட்டமைப்புகள் பலப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய் தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க, மாற்று இடங்களுக்கு மார்க்கெட்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: