• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tamil Nadu Full Lockdown: தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி இயங்காது

Tamil Nadu Full Lockdown: தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி இயங்காது

மாநகரப் பேருந்து

மாநகரப் பேருந்து

இன்றும், நாளையும் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் போது பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தொற்று படு வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட 25,000 தொற்றுகள் பதிவாகின்றன. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் வரும் மே 10-ம் தேதி காலை 4 மணி முதல், மே 24-ம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக இன்றும், நாளையும் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முழு ஊரடங்கு நாட்களில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர். இதை தவிர வேறு எந்த போக்குவரத்தும் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: