கொரோனாவை புதிய அரசு சிறப்பாக கையாளுகிறது - அன்புமணி ராமதாஸ் பாராட்டு

அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வேளாண்மைக்கான நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டு தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது.

  • Share this:
கொரோனாவை புதிய அரசு சிறப்பாக கையாளுகிறது என்றும் காவிரி -கோதாவரி இணைப்பு தொடர்பாக ஆந்திர , தெலுங்கானா , ஒடிசா அரசுகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வேளாண்மைக்கான நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டு தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. அந்தவகையில் 14 வது ஆண்டாக,  47ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டு கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணோலி முறையில் உரையற்றினர்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ்,  வேளாண் விளை பொருட்களை பாதுகாக்க குளிர் பதன கிடங்குகளை வட்டம் தோறும் அமைப்போம். 100 ஐஏஎஸ், அரசு அதிகாரிகளின் மூலம் ஆட்சியாளர்கள் தயாரிக்கும் அறிக்கையை பாமக தயாரித்துள்ளது.
47, 750 கோடி ரூபாய் மதிப்பில் எங்களது இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேஷ் , தெலங்கான , குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னேற காரணம் நீர் பாசன திட்டம்தான். 1 லட்சம் கோடி ரூபாய் வரை நீர்பாசனத் திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். வேளாண் துறை வளர்ச்சி மைனசில் உள்ளது , இதை 6 விழுக்காடாக மாற்ற திட்டம் வைத்துள்ளோம் .  கொரோனா காலத்தில் விவசாய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு 1,500 கோடி ரூபாய் தற்போது நிலுவையில் உள்ளது.

Also Read :  சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வர வேண்டும் - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

காலநிலை மாற்றம் வேளாண் துறைக்கு  மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் மிக முக்கியமானது.இ து தொடர்பாக  தமிழக அரசு ஆந்திர , தெலுங்கான , ஒடிசா அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கோதாவரியில் 1500 டிஎம்சி நீர்  கடலுக்கு செல்கிறது. 200-250 டிஎம்சி தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். சரபங்கா திட்டம் 60 ஆண்டுகால கோரிக்கை யாக உள்ளது.

மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். எம்-சாண்ட் , மணல் ஏற்றுமதி மூலம் மணல் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அதிகம் உள்ள சீமக் கருவேலத்தை அகற்றி , யூகலிப்டஸ் மரங்களை தடுக்க வேண்டும். பனை மர வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். 5 வேளாண் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுக்குள் தமிழகத்தில் 300 கோடி மரங்களை நட வேண்டும்.

கால நிலை மாற்றத்தால் கொரோனா உருமாறி வருகிறது. பல ஆண்டுகளாகவே கொரோனா இருக்கிறது. அது காலநிலையால் உருமாறி வருகிறது. மது விலக்கு போராட்டத்தை பாமக பல ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் அனைத்து கட்சிகளும் இன்று ஏற்றுள்ளன. வேளாண் தனி நிதி அறிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது. இந்த அறிவிப்பு வெளிவர காரணமாக இருந்தவர் ராமதாஸ்.

Also Read : “பிரிக்க முடியாதது எது? திமுகவும் மின்வெட்டும்!” திருவிளையாடல் பட டயலாக்கால் கிண்டலடித்த நத்தம் விஸ்வநாதன்!

எங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் கட்சித் தலைவர் ஜி.கே.மணி வழங்குவார். அதிமுக கூட்டணியில் சேரும் முன்பு 10 கோரிக்கையை பாமக சார்பில் முன் வைத்தோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கோரிக்கையை தமிழக அரசு ஏற்று அறிவிப்பை வெளியி்ட்டது. அரியலூர் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பட்டியலில் இணைக்க வேண்டும்.பாமகவின் பல கோரிக்கையை அதிமுக நிறைவேற்றியது.

புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் ஆன நிலையில் , கொரோனாவை  தமிழக அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது. கொரோனா தீவிரமாக காரணம் தேர்தல்தான் .தேர்தலுக்கு பிந்தைய இடைக்கால அரசின் காலத்தில் கொரோனா தீவிரமாக பரவியது. கட்சி வேறுபாடு இன்றி நல்ல திட்டங்களை பாரட்டவே செய்வோம்.

மேட்டூர் சரபங்கா திட்டம் குறித்து கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது உபரி நீர் திட்டம் என்பதால் டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி நீர் செல்வதில் பாதிப்பு ஏற்படாது. மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தின் மிகப்பெரிய அணையாக அது அமைந்துவிடும். வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட வழக்கை திமுக அரசு தரும்ப பெற வேண்டும்.

மாநிலமென்றால் 4 கோடியும்  , மாவட்டம் என்றால் 12 லட்சமாகவும் மக்கள் தொகை இருக்க வேண்டும். நிர்வாக காரணங்களுக்காகவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இதில் அரசியல் இல்லை. பஞ்சமி நிலம் தொடர்பாக திருமாவளவனுக்கு முன்பே ராமதாஸ் போராடி நிலத்தை மீட்டு கொடுத்துள்ளார் என்றார்.

இதை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், பாமக சார்பில் 13 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதி அறிக்கை வெளியிடப்படுகிறது. நாங்கள் முன்வைத்த திட்டத்தை ஆண்டுக்கு ஒன்றாக தமிழக அரசு நிறைவேற்றியிருந்தாலும் வேளாண்மையில் தமிழகம் தன்னிறைவு பெற்றிருக்கும். ஆளுநர் உரையில் தமிழக அரசு வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியாகும்  என்று கூறியுள்ளது வரவேற்கப்பட வேண்டியது ,  மகிழ்ச்சிகரமானது. இந்த ஆண்டின் சிறந்த தொடக்கமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

இந்த ஆண்டு அறிக்கையில் வேளாண் கல்வி , வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம்.வேளாண் துறைக்கு 47, 750 கோடி நிதி ஒதுக்கவும், கூட்டுறவு வங்கிகளுக்கு 7358.85 கோடி நிதி ஒதுக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். கோதாவரி - காவிரி திட்டம்  நிறைவேறினால் நீர் வளம் பெருகி , இலக்கியங்களில் கூறப்பட்டவாறு காவிரியில் நீர் அதிகரிக்கும்.
காவிரி சரபங்கா , மணிமுத்தாறு இணைப்பு திட்டம் , காவிரி - குண்டாறு திட்டம் விரைவுபடுத்துவது உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளன.

Also Read : சந்திர பிரியங்கா: புதுச்சேரியில் 40 வருடங்களுக்கு பின் அமைச்சராகியிருக்கும் 2வது பெண்!

ஹைட்ரோ கார்பன் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும். வேளாண் துறை மூன்றாக பிரிக்கப்படும். சீமைக் கருவேல ஒழிப்பு, அதிசய மரம் என்று நான் கூறும் பனை மரத்தை பாதுகாக்க தனி சட்டம் வெளியிடப்படும். எங்கள் அறிக்கையை கவனமாக பரிசீலித்து , தமிழக அரசு  நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாமகவின் எதிர்பார்ப்பு. பாமக அறிக்கையாக கருதாமல் பொதுமக்கள் கோரிக்கையாக கருதி நிறைவேற்ற வேண்டும் என்பது தமிழக அரசுக்கு எங்களது வேண்டுகோள்.பரபரப்பு இல்லை என்றாலும் பயன்தரும் அறிக்கை இது.

மேலும் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வரும்  பாமக எப்போது ஆட்சி அமைத்து நிஜ அறிக்கையை வெளியிடும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு , ஊடகங்கள் பாமகவுடன் கூட்டணி அமைத்தால் அடுத்த 5 ஆண்டில் பாமக ஆட்சி அமைத்துவிடும் என மருத்துவர் ராமதாஸ் நகைச்சுவையாக பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: