மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ்க்கு கொரோனா தொற்று

மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ்க்கு கொரோனா தொற்று

அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும்....

அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும்....

 • Share this:
  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவரும், அண்ணா நகர் தொகுதி வேட்பாளருமான வெ. பொன்ராஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

  இத தொடர்பாக பொன்ராஜ் தனது முகநூல் பக்கத்தில், “நான் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

  இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால், களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி.

  நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன்.

  Must Read : தடுப்பூசி போட்டால் பாதிப்பு வராது என்று அலட்சியம் கூடாது; கொரோனா 2-வது அலை தீவிரமாக இருக்கும்- எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

   

  ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, YouTube மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன். ZOOM MEETING மூலம் நான் அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: