தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று இரவு நேரம், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டெல்டா, ஒமைக்ரான் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் ஏற்றம் குறைந்துள்ளது.
Also read... குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் - திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு!
கடந்த 15ம் தேதி 30% ஆக இருந்த பாதிப்பு தற்போது 20%ஆக குறைந்துள்ளது. 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆக்சிஜன் சிகிச்சை பெறுவோர் மற்றும் உயிரிழப்பு குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. எனினும் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். பூஸ்டர் டோஸுக்கு தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் கொரோனா வரும். பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் கொரோனா தொற்று குறைவது ஆறுதலாக இருக்கிறது.கொரோனா தொற்றால் இறந்தவர்கள் தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தான். அதனால் தான் 95 சதவீதம் இறப்பு விகிதம் உள்ளது.
கொரோனா தொற்று நிலையை பொறுத்து வரும் வாரங்களில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். மேலும்,கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Also read... கடலூர் திருவந்திபுரம் கோவில் சாலையில் 100க்கு மேற்பபட்ட ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Covid-19, Radhakrishnan