முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

இபிஎஸ் மனைவிக்கு கொரோனா

இபிஎஸ் மனைவிக்கு கொரோனா

Corona infection : எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னை வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 1,461 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டும் 697 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,23,557 பேர் குணமடைந்துள்ளனர். 8,222 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று 543 பேரும், செங்கல்பட்டில் 240 பேரும், கோவையில் 181 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இபிஎஸ்-ன் மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான தொற்று இருப்பதால் அவர் தன்னை சேலத்தில் உள்ள வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.

Must Read : நீ என்ன ஜெயக்குமார் ஆளா எனக் கூறி அதிமுக தொண்டர் வாயில் குத்து.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Corona positive, Edappadi Palaniswami, EPS, Salem