கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இன்று தொற்று 2000-க்கும் கீழ் சரிந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் புதிதாக 1,675 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பாதிப்பு 2,323 ஆகவும், 22ஆம் தேதி 2,226 ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 2,022 ஆக குறைந்த நிலையில், 3ஆவது நாளாக இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் கீழே சரிந்துள்ளது.
கொரோனாவால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 40,068 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,490 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,635 பேர் குணமாகி உள்ளனர். அதன்படி, இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 737 ஆக உயர்ந்தது. தற்போது 14,841 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுளனர்.
Must Read : மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
முன்னதாக, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள சென்னை ஐஐடியில் இதே போல் அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது, அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, Chennai, Corona, Covid-19