Home /News /tamil-nadu /

திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று

திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று

கனிமொழி

கனிமொழி

Kanimozhi : திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று 17,122 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஒரே நாளில் 686 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கொரோனா பாதிப்புக்கு ஆளான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சோனியா காந்தி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவரது உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.

    Must Read : அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி... திறமை மிக்கவர் வரவேண்டும் - நயினார் நாகேந்திரன்

    இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 2ஆவது முறையாக மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Corona, Covid-19, DMK, Kanimozhi

    அடுத்த செய்தி