Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று 500-ஐ கடந்தது - தலைப்புச் செய்திகள் (ஜூன் 17, 2022)

Headlines Today : தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று 500-ஐ கடந்தது - தலைப்புச் செய்திகள் (ஜூன் 17, 2022)

கொரோனா

கொரோனா

Headlines Today : நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காலஅவகாசம் வழங்கக் கோரி ராகுல் காந்தி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 532 பேருக்கு புதிததாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்தால், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தற்போதைக்கு ஒற்றைத் தலைமைக்கான தேவை ஏற்படவில்லை என்றும், ஈபிஎஸ் உடன் பேசத் தயார் என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து, பாஜக எந்தவொரு கருத்தும் கூறாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.

ஆளநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு 28 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்வு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

10 மற்றும் 12ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

விளாத்திகுளம் அருகே அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை, சாதி ரீதியாக மாணவருடன் பேசிய ஆடியோ வெளியான நிலையில், அவரும், மற்றொரு ஆசிரியையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி அருகே ஊர் பஞ்சாயத்தில் காலில் விழுந்த முதியவர் உயிரிழந்த விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு சிறுமியிடம் சட்டவிரோதமாக சினைமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமைந்துள்ள சிவாலய கும்பாபிஷேகத்துக்கு மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இரு கிராமங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வந்தனர்.

செட்டிநாடு கட்டட கலையில் கட்டப்பட்டு வரும் கீழடி அகழ்வைப்பகத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை மக்களை குளிர்வித்துள்ளது.

சென்னையின் 2-வது விமான நிலையத்தை பன்னூரில் அமைக்க சாதகமான அம்சங்கள் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்கான உச்சபட்ச வயது வரம்பு நடப்பு ஆண்டுக்கு மட்டும் 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் ஆபத்தானது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வீடுகள் இடிப்பு நடவடிக்கை பழிவாங்குவதாக இருக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காலஅவகாசம் வழங்கக் கோரி ராகுல் காந்தி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாலின பாகுபாடு குறித்த புகார்களை விசாரிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் தனி குழு அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தனி தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலையும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலும் வன்முறையே என சுட்டிக்காட்டி பேசிய சாய் பல்லவி மீது ஹைதராபாத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Must Read : சென்னைவாசிகள் கவனத்திற்கு..! முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கியிருக்கும் ஓ-2 திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி யில் வெளியாகியுள்ளது.

ஹாங் காங்கின் அடையாளமாக திகழ்ந்த மிதக்கும் உணவகம், இழப்பு ஏற்பட்டதால் அதன் வணிகத்தை முடித்துக்கொண்டது.

நாகை மாவட்டம் திருக்குவளையில் மாநில அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான கபடி போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 4-வது ஆட்டத்தில் களம் காணுகிறது.

First published:

Tags: CoronaVirus, Headlines, Today news, Top News