சென்னை ஐஐடி வளாகத்தில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் அறிகுறிகள் இல்லை என்பதால் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
டெல்லியில் 15 நாட்களுக்கு முன்பு வரை, தமிழகத்தை போன்று தினசரி கொரோனா பாதிப்பு 30 பேர் என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது. ஆனால் தற்போது அது பல மடங்காக அதிகரித்து தொற்ற பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன்மூலம் டெல்லியில் தொற்று பரவல் விகிதம் 1 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலால் டெல்லியில் நான்கு பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்ட்ரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று அதிகரிப்பால் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 17ஆம் தேதி 1,150 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நிலையில் படிப்படியாக அதிகரித்து நேற்று 2 ஆயிரத்து 67 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த அதிவேக பரவல் நல்ல அறிகுறியல்ல என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
Must Read : அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
இதுதொடர்பாக, தொற்று நோயியில் நிபுணர் (epidemiologist)ஜெயபிரகாஷ் முல்லியல் கூறும்போது, இந்தியாவில் பலருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தி ஒன்பது மாதங்கள் ஆகியிருக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கியிருக்கும். டெல்டாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எட்டு மாதங்கள் வரை நோய் பாதுகாப்பு இருந்தது. ஆனால் ஜனவரி மாதத்தில் அலை ஏற்படுத்திய ஒமைக்ரான் அந்த அளவு பாதுகாப்பு தரவில்லை.
சில வாரங்கள் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. எனவே தற்போது பாதிப்பு அதிகரிக்கும் என்பது எதிர்ப்பார்த்தது தான். ஆனால் தீவிர பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படவில்லை." என்று அவர் கூறுகிறார்.
எனினும் தற்போது வழங்கப்படும் எண்ணிக்கைகள் மிக மிக குறைவு. நிஜமான பாதிப்பு இதை விட 150 மடங்கு அதிகமாக இருக்கும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பதால் தற்போது தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் அறிகுறிகள் இல்லை என்பதால் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இதையடுத்து வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 7 பேர் லேசான அறிகுறிகளுடன் இருப்பதால் அவர்களுக்கும் தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்து மேலும் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். கோவிட் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.