சென்னை வந்த முதல் ஆக்சிஜன் ரயில்: அமைச்சர்கள் கைதட்டி வரவேற்பு

ஆக்சிஜன் ரயில்.| மாதிரிப்படம்.

கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் தேவை பெரிய அளவில் அதிகரித்ததையடுத்து சென்னைக்கு நேற்று வந்தது முதல் ஆக்சிஜன் ரயில், அதனை அமைச்சர்கள் கைதட்டி வரவேற்றனர்.

 • Share this:
  கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் தேவை பெரிய அளவில் அதிகரித்ததையடுத்து சென்னைக்கு நேற்று வந்தது முதல் ஆக்சிஜன் ரயில், அதனை அமைச்சர்கள் கைதட்டி வரவேற்றனர்.

  தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து அண்டை மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் வரவழைக்கப்படுகிறது.

  மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் இருந்து, நேற்று அதிகாலை சென்னை, தண்டையார்பேட்டை, கான்கார்ட் ரயில்வே யார்டிற்கு வந்த, முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை, சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கைதட்டி வரவேற்றனர்.

  டேங்கர் ஒன்றில், 20 டன் வீதம், நான்கு டேங்கர்களில், 80 டன் ஆக்சிஜன் வந்துள்ளது. அவை, 'ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ்' நிறுவனத்தின், நான்கு கன்டெய்னர் லாரிகளில் மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

  பின் அமைச்சர் மா. சுப்ரமணியம் கூறும்போது, “இக்கட்டான சூழலில், தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதில் ஒரு பகுதியாக, இப்பணியும் சாத்தியமாகி உள்ளது.

  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும், ஐந்து நாள் கடந்தால், கொரோனா சங்கிலி தொடர் உடைந்துள்ளதா என்பது தெரியும். தமிழகத்தில் ஊரடங்கு இன்னும் கடுமையாக்கப்படும்.

  அதைத் தான் மக்களும் விரும்புகின்றனர். ஊரடங்கை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இன்னும் பல பகுதிகளில் இருந்து, ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.” என்று கூறினார்.
  Published by:Muthukumar
  First published: