Tamil Nadu Full Lockdown | தமிழகத்தில் இன்றும் நாளையும் இரவு 9 மணிவரை கடைகள் திறக்க அனுமதி

மாதிரிப் படம்

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

    தமிழகத்தைப் பொறுத்துவரை நாள் ஒன்றுக்கு 25,000-த்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், அத்தியாவசிக் கடைகள் திறந்திருப்பதற்கு எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை. உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகை சாமான் கடைகள் செயல்பட நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகை சாமான் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டுவருகிறது.

    இந்தநிலையில், இன்றும் நாளையும் முழு நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அறிவிப்பில், ‘முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: