இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்துவரை நாள் ஒன்றுக்கு 25,000-த்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசிக் கடைகள் திறந்திருப்பதற்கு எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை. உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகை சாமான் கடைகள் செயல்பட நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகை சாமான் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டுவருகிறது. இன்றும், நாளையும் இரவு 9 மணி வரை
கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் காலை 8 மணி முதல் 12 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மதுபானக் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துவந்தனர்.
இந்தநிலையில், கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.