கொரோனா: தமிழக சிறைகளிலுள்ள முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ கோரிக்கை

மஹாராஷ்டிரா மற்றும் உ.பியில் தலா 11,000 கைதிகளுக்கு பரோல் அளிக்கும் நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் தொடங்கியுள்ளன.

கொரோனா: தமிழக சிறைகளிலுள்ள முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
கோப்புப் படம்
  • Share this:
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றைத் தடுக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”சிறைகளில் கொரோனா வைரஸால் ஏற்படும் நோய் பரவலைத் தடுக்க, கைதிகளை பரோலில் விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளே உயர்மட்ட குழுவை அமைக்கவும், அந்தக் குழுவில் மாநில சட்ட உதவி மைய தலைவர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவில் உள்ள 1,339 சிறைகளில் சுமார் 4,65,000 கைதிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதன் கொள்ளவை விடவும் அதிகமாகும். சிறைகளில் அடைபட்டுள்ளவர்களுள் மூவரில் இருவர் விசாரணைக் கைதிகள் ஆவர். தமிழக சிறைகளிலும் அத்தகையதொரு நெருக்கடி நிலவிவருகிறது.

மிகப்பெரும் அளவில் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படும் சிறைகளில், தற்போது உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸால் நோய் தொற்று ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதனால்தான் இது தொடர்பான வழக்கை தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Also read: ஊரடங்கு: ஆதரவற்று வீதிகளில் சுற்றித்திரியும் 350 பேரை மீட்டெடுத்த தன்னார்வலர்கள்!உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து மஹாராஷ்டிரா மற்றும் உ.பியில் தலா 11,000 கைதிகளுக்கு பரோல் அளிக்கும் நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. தமிழக அரசும் அந்த நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

அது மட்டுமின்றி இந்த வழக்கு விசாரணையின் போது நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிப்பது தொடர்பாகவும் மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்றும் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது. ஆகவே, தமிழக அரசு நீண்டநாள் சிறைக்கைதிகளை விடுவிக்கவும், அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று வயதானவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையுமே அதிகம் பாதிக்கும் என்பதால், 50 வயது மற்றும் நோய்வாய்ப்பட்ட சிறைக் கைதிகளையும் தமிழக அரசு பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு இந்த நடவடிக்கைகளில் கடந்த காலங்களைப் போன்று எவ்வித மத, இன, மொழி பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பு கைதிகளையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்” இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also see:
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading