தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்களைவிட அதிகரித்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்களைவிட அதிகரித்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
மாதிரிப்படம்
  • Share this:
தமிழகத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாடு corona curve என்பது மேல்நோக்கியே சென்று கொண்டிருந்தது. அதனை சமப்படுத்துவது என்பதே பெரும் சவாலாக இருந்துவந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,500 என்ற அளவுக்கு உயர்ந்தது. மூன்று தினங்களாக 4,500 வரை பாதிப்பு இருந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களாக 3,500 என்ற அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் 2,000-க்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு தினங்களாக 1,200 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று, 3,793 கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர்.இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு குணமடைந்து 4,545 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading