• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவிக்கும் கொரோனாவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினர்

அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவிக்கும் கொரோனாவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முன்களப்பணியாளர்களாகப் பணியாற்றி உயிர் தியாகம் செய்த போலீசாரின் குடும்பத்தினருக்கு இன்னும் அறிவிக்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
    உலகமே கொரோனவைக் கண்டு அஞ்சி வீட்டில் முடங்கி கிடந்த நிலையில், உயிருக்கு அஞ்சாமல் சாலைகள், மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியாற்றினார்கள். அப்படி பணியாற்றியவர்களில், கடந்த மே மாத கணக்கின்படி 84 போலீசார் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த 84 பேரில், 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், மீதமுள்ள உயிரிழந்த 71 நபர்களில் 36 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டன. 36 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9 கோடியினை நிவாரணத் தொகையாக வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக தரவுகள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல், எஞ்சியுள்ள 35 நபர்களின் வாரிசுகளுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன், அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பு சொல்கிறது.

    ஆனால், இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட காவலர்களின் வாரிசுகளுக்கு உரிய நிவாரணம் சென்று சேரவில்லை என்கிறது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணம்.

    அதிமுக ஆட்சிக்காலத்தில் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ.3.25 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது குறித்த அரசு ஆணையை டிஜிபி அலுவலகம் அளித்துள்ளது. ஆனால், கடந்த மே மாதம் 20 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் அறிவித்த உத்தரவு குறித்த கேள்விக்கு, இன்னும் பணி நிறைவடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் செக்காணுரணி காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர் பாண்டி 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். ஆனால், இதுவரைக்கும் அவரது வாரிசுகளுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.

    குடும்பத்தலைவர்களை கொரோனா என்று அரக்கணுக்கு காவு கொடுத்துவிட்டு, நிவாரணத்திற்காக ஏங்கி நிற்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு உதவி செய்யுமா? தமிழக முதலமைச்சர் உதவி கிடைக்க உத்தரவிடுவாரா? என்று பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: