ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மும்பையில் கொரோனா பாதிப்புகள் ஒரே நாளில் 82 சதவீதம் அதிகரிப்பு... முதல்வர் அவசர ஆலோசனை

மும்பையில் கொரோனா பாதிப்புகள் ஒரே நாளில் 82 சதவீதம் அதிகரிப்பு... முதல்வர் அவசர ஆலோசனை

மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்ட கொரோனா நிவாரண மையங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்ட கொரோனா நிவாரண மையங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்ட கொரோனா நிவாரண மையங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவின் பொருளாதார தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பையில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் அதிரடியாக 82 சதவீதம் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

நேற்றைக்கு ஒருநாள் பாதிப்பு 1,377 ஆக இருந்த நிலையில் இன்றைக்கு பாதிப்பு 2,510 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மீண்டும் ஆக்சிஜன் உருளைகளை ஏற்பாடு செய்தல், படுக்கைகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

Read More : பால் வேனில் மது கடத்திய பலே கடத்தல்காரர்கள்: ரூ.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

குறிப்பாக அதிக வயதுடையோர், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசிகளை செலுத்த தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. 31 ம் தேதி வரை பொது இடங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், புத்தாண்டு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் சிசிடிவி உதவியால் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனார். விதிகளை மீறும் நிறுனங்கள் சில மாதங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Must Read : கொரோனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக் கொண்ட இளைஞர்

ஜனவரி மாதம் முதல் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள், சீனியர் சிட்டிசன்கள் உள்ளிட்டோருக்கு 3வது டோஸ் செலுத்த முடிவு செய்யப்பட்டு, அவர்கள் யார் யார் என்ற பட்டியலையும் மும்பை நிர்வாகம் தயாரித்து வருகிறது.

மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்ட கொரோனா நிவாரண மையங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, மும்பை நகரில் மட்டும் 54 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை

First published: