தமிழகத்தில் 316 கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள்

அதிகபட்சமாக சென்னையில் 201 கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் 316 கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 9, 2020, 11:12 AM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள காரணத்தால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் விபரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளை முழுமையாக கட்டுப்படுத்தி அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு அறிகுறி உள்ள அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்த படுவர். அங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

மாவட்ட வாரியாக உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள், எந்தெந்த மாவட்டங்களில் அதிகமான மண்டலங்கள் உள்ளன என்பது குறித்த முழு விபரங்களை அரசாணையாக வெளியிடப்பட்டு உள்ளது. முழு பட்டியல் பார்க்க கிளிக் செய்க...


ஜூன் 5 தேதி நிலவரப்படி மொத்தமாக 16 மாவட்டங்களில் 316 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 201 பகுதிகளும், திருவண்ணாமலையில் 29 பகுதிகளும், கடலூரில் 26 பகுதிகளும், காஞ்சிபுரத்தில் 13 பகுதிகளும் உள்ளன. குறைந்தபட்சமாக அரியலூரில் 3 இடங்களும், தூத்துக்குடியில் 2 இடங்களும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா 1 பகுதியும் உள்ளன.
மாவட்டம் - எண்ணிக்கை

____
அரியலூர் - 3

செங்கல்பட்டு - 7

சென்னை - 201

கடலூர் - 26

கள்ளக்குறிச்சி - 5

காஞ்சிபுரம் - 13

கன்னியாகுமரி - 1

நாகப்பட்டினம் - 9

ராமநாதபுரம் - 1

ராணிப்பேட்டை - 1

தென்காசி - 6

தஞ்சாவூர் - 1

தூத்துக்குடி - 2

திருநெல்வேலி - 7

திருப்பத்தூர் - 4

திருவண்ணாமலை - 29


Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்











First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading