பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு கொரோனா: புதிய வகை கொரோனாவா?

பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு கொரோனா: புதிய வகை கொரோனாவா?

மாதிரி படம்

பிரிட்டனில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதியவகை கொரோனாவா?

 • Share this:
  பிரிட்டனில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  சில தினங்களுக்கு முன்னர், பிரிட்டனில் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும், பிரிட்டனுடனான விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

  இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.  அவருக்கு இங்கிலாந்தில் பரவிவரும் புதியவகை கொரோனா இருக்கின்றதா என்பதை கண்டறிய அவரின், சளி மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

  இந்த ஆய்வின் முடிவு வந்த பின்னர்தான், அவருக்கு புதிய வகை கொரோன தொற்று இருக்கின்றதா என்பது தெரியவரும் என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
  Published by:Suresh V
  First published: