Home /News /tamil-nadu /

பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோப்புப் படம்

கோப்புப் படம்

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுகொண்டார்.

    தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று குறைந்துகொண்டு வருவதாகவும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் பிறந்த நாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர்அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி அடுத்தடுத்து அரசியலில் சிறப்பாக பணியாற்றியவர் எம்.ஜி.ஆர்  என்று புகாழரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர்,கொரோனா தொற்று இரண்டு நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது.பொங்கல் விடுமுறைக்கு பிறகு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் . கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக படுக்கை வசதிகள் உள்ளது. 9 ஆயிரத்துக்கும் குறைவாகவே படுக்கைகள் நிரம்பியுள்ளது. தேவையான அளவு ஆக்ஜிசன் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளது.அரசு மருத்துவமனைகளில் ஓ.பி. நேரம் அதிகரிப்பது தொடர்பாக மருத்துவமனை முதல்வர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார்.

    மேலும் படிக்க: தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Ma subramanian, MGR, Omicron

    அடுத்த செய்தி