Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,461 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,461 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இன்று மட்டும் சென்னையில் 543 பேரும், செங்கல்பட்டில் 240 பேரும், கோவையில் 181 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,461 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,461 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,69,805 ஆக உயர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் 697 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,23,557 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 8,222 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்று மட்டும் சென்னையில் 543 பேரும், செங்கல்பட்டில் 240 பேரும், கோவையில் 181 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி