• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் 7 மாவட்டங்கள்..

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் 7 மாவட்டங்கள்..

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 29ஆம் தேதி புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 299 ஆகவும், நேற்று 185 ஆகவும் அதிகரித்தது.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி சீராக தினசரி பாதிப்பு குறையவில்லை. நேற்று 15 மாவட்டங்களிலும், நேற்று முன்தினம் 17 மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து இருந்தது. இந்த மாவட்டங்களில் குறிப்பாக 7 மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை தரவுகள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம் நீலகிரி சிவகங்கை திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சில மாவட்டங்களில் 2 தினங்களாக ஒரு சில மாவட்டங்களில் அதற்கும் மேலாகவும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஓரிரு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்றமும் இறக்கமும் கொண்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. 29ஆம் தேதி புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 299 ஆகவும், நேற்று 185 ஆகவும் அதிகரித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திலும் 29ஆம் தேதி வரை பாதிப்பு குறைந்து வந்தது. அன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக இருந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 65 ஆகும் நேற்று எழுவதாகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாக அரசு கூறியுள்ள 11 மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியில் கடந்த 29ஆம் தேதி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 75 ஆகும். முப்பதாம் தேதி இந்த எண்ணிக்கை 87 ஆகவும் நேற்று 90 ஆகவும் உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இதேபோன்று கடந்த இரு தினங்களாக புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகவே பாதிப்பு அதிகரித்து வருகிறது. 28 ஆம் தேதி புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது நேற்று அந்த மாவட்டத்தில் 29 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

Also read: அதிமுக தொண்டர்களின் உள்குத்து வெளிக்குத்தாலேயே ஆட்சியை பறிகொடுத்தோம்: ஆர்.பி.உதயகுமார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பு ஏறியும் இறங்கியும் பதிவாகி வருகிறது. கடந்த 25ஆம் தேதி புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 என இருந்தது. 26 ஆம் தேதி 30 பேர் கூடுதலாக 140 என பதிவானது. அதன்பிறகு பாதிப்பு மெல்ல குறைந்து 29ஆம் தேதி 99ஆக இருந்தது.

அதன்பின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று கள்ளக்குறிச்சியில் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களை தவிர நேற்று புதிதாக மதுரை மாவட்டத்திலும் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வரை பாதிப்பு மதுரையில் தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று முன்தினம் 68 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் நேற்று புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: