Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,500-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,500-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இன்று மட்டும் சென்னையில் 624 பேருக்கும், செங்கல்பட்டில் 241 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,500 பேர்  கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று மட்டும் 25,591 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 34,68,344 பேராக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 691 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து தற்போது 7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

    இன்று மட்டும் சென்னையில் 624 பேருக்கும், செங்கல்பட்டில் 241 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி