பிரான்சில் இருந்து திரும்பிய இருவர் உட்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா!

கொரோனா

சென்னை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மூன்று இலக்கங்களில் பதிவாகிவரும் அதேவேளையில், ஒருசில மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவாகியுள்ளது

 • Share this:
  தமிழகத்தில் இன்று புதிதாக 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 2 பேர் வெளிநாட்டில் இருந்தும் 3 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் ஆவர்.

  தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மெல்ல அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,44,632 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,957 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் பிரான்ஸ் நாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் ஆவர்.  இதேபோல், தமிழகத்துக்கு ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் 2 பேருக்கும் பீகார் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: கொரோனா மூன்றாவது அலை... ராமதாஸ் கூறும் அறிவுரைகள்!

  சிகிச்சையில் 20,385 பேர்

  இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 25,63,544 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,068 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,09,029 பேர் வீடு திரும்பியுள்ளனர். 20,385 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

  கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 23 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்  உயிர் இழந்துள்ளனர்.  இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 34,130 ஆக உயர்ந்துள்ளது.

  மேலும் படிக்க: பெண்களுக்கு வாக்குரிமை, இருமொழி கொள்கை... தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டங்கள் என்ன?


  அதிக பாதிப்பும் குறைந்த பாதிப்பும்:

  இன்று மட்டும் சென்னையில் 189 பேருக்கும், கோயம்புத்தூரில் 219பேருக்கும், செங்கல்பட்டில் 127 பேருக்கும், ஈரோட்டில் 168 பேருக்கும்  தஞ்சாவூரில் 123 பேருக்கும்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மூன்று இலக்கங்களில் பதிவாகிவரும் அதேவேளையில்,ஒருசில மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவாகியுள்ளது. பெரம்பலூரில் 7 பேருக்கும் ராமநாதபுரத்தில் 8 பேருக்கும் தென்காசியில் 9 பேருக்கும் கொரோனா தொற்று  பதிவாகியுள்ளது.

   
  Published by:Murugesh M
  First published: