• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை, கோவையில் 200ஐ தாண்டிய தினசரி கொரோனா- மலேசியாவில் இருந்து வந்த 3 பேருக்கும் தொற்று உறுதி!

சென்னை, கோவையில் 200ஐ தாண்டிய தினசரி கொரோனா- மலேசியாவில் இருந்து வந்த 3 பேருக்கும் தொற்று உறுதி!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

சென்னையில் 203 பேருக்கும், கோயம்புத்தூரில் 208 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 181 பேருக்கும்  தஞ்சாவூரில் 118 பேருக்கும்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  • Share this:
    தமிழகத்தில் இன்று புதிதாக 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3  பேர் மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் ஆவர்.

    தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மெல்ல அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,44,903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,908 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் மலேசியா நாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் ஆவர்.

    இதையும் படிங்க: மீண்டும் உயரும் தமிழகத்தின் வருவாய்- ஒரே மாதத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஈட்டிய பத்திரப்பதிவுத்துறை


    சிகிச்சையில் 20,217 பேர்

    இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 25,65,452 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,047 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,11,076 பேர் வீடு திரும்பியுள்ளனர். 20,217 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 23 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்  உயிர் இழந்துள்ளனர்.  இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 34,159 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் படிக்க: குடும்ப தலைவிக்கு ரூ.1000: மக்கள் அச்சமடைய வேண்டாம்- அமைச்சர்


    அதிக பாதிப்பும் குறைந்த பாதிப்பும்:

    இன்று மட்டும் சென்னையில் 203 பேருக்கும், கோயம்புத்தூரில் 208 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 181 பேருக்கும்  தஞ்சாவூரில் 118 பேருக்கும்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில்  6 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: